இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதற்கு பக்கத்தான் எம்பிகள் எதிர்ப்பு

nurul izzதேர்தல் தொகுதி  எல்லைகளைத்  திருத்தி  அமைக்கத்  தேவையில்லை  என  பிகேஆர்  தலைவர்கள்  எதிர்ப்புத்  தெரிவிக்கின்றனர்.

அப்படியே  தேர்தல்  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  முயற்சி  எதுவும்  நடந்தாலும்  அது  நியாயமான  முறையில்  நடத்தப்பட  வேண்டும்  என்று பந்தாய் லெம்பா  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  கூறினார். அதுவே,  மற்ற  எம்பிகளின்  விருப்பமுமாகும்.

நுருல்  இஸ்ஸா, நேற்றிரவு  பினாங்கில்  ஒரு  கருத்தரங்கில்  கலந்துகொண்டு  பேசினார்.

தேர்தலை  நடத்துவோரும்  தேர்தல் எல்லைகளைத்  திருத்தி  அமைப்போரும்  ஒரே  தரப்பினராக  இருக்கக்  கூடாது  என்றாரவர்.

இப்போதே  தேவைக்கும்  அதிகமான  எம்பிகள்  இருந்துகொண்டு  கூச்சலிட்டுக்  கொண்டிருப்பதாக  நுருல்  சொன்னார்.

இதனிடையே,  தேர்தல்  ஆணையம் (இசி), அடுத்த நாடாளுமன்றக்  கூட்டத்தில்  தேர்தல்  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்க  அனுமதி  கோரும்  தீர்மானம்  கொண்டுவரப்படுவதாகக்  கூறப்படுவதை  மறுத்துள்ளது.