“ஹாடியை வீழ்த்த அனைத்துலக சதித் திட்டம்”

 

Pas Hadi international moveபாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் அதன் உலாமா ஸுரா மன்றம் ஆகியவற்றை “அகற்றுவதற்கான” இயக்கம் பாஸ் கட்சியின் முன்னேற்றத்தினால் மன அமைதிகுலைந்துள்ளவர்களால் மேற்கொள்ளப்படுள்ள ஓர் அனைத்துலகத் சதித் திட்டம் என்று அக்கட்சியின் நிக் முகமட் அப்து நிக் அசிஸ் நேற்று அவரது முகநூலில் எழுதியுள்ளார்.

பாஸ்சின் ஆன்மீக தலைவரான நிக் அசிஸ் நிக் மாட்டின் மகனான நிக் அப்து பாஸ்சின் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். சில தரப்பினர் பாஸ் கட்சி “மிக வலுவான பக்கத்தான் ரக்யாட் கட்சி”யாக வளர்ந்திருப்பதால் கலக்கமடைந்துள்ளனர் என்றார்.

உண்மையான இஸ்லத்தை மலேசியாவில் நிலைநிறுத்த விரும்பும் பாஸ்சின் நாட்டம் மேற்கத்திய நாடுகளையும் “இஸ்லாத்தின் எதிரிகளையும்” உலக முழுவதும் நிலைகுலையச் செய்துள்ளது என்று நிக் மேலும் கூறினார்.

nik mat“முதுமையடைந்து வீழ்ச்சியின் விளிம்பில் பின் இருக்கையில், எதிரணியில் பாஸ் ஒரு முக்கிய ஆட்டக்காரராக தோன்றியிருப்பது அவர்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது”, என்று கூறிய நிக், பாஸ்சை பலவீனப்படுத்தும் நடவடிக்கை இப்படித்தான் கட்சிக்குள்ளிருந்தே ஆரம்பித்தது என்றார்.

“இவர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இஸ்லாம் வேண்டும் என்ற கோரிக்கையை முடக்கி அதன் இடத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, உடன்பாடு செய்துகொள்ளக்கூடிய இஸ்லாத்தை வைக்க விரும்புகின்றனர்”, என்று நிக் அப்து விவரித்தார்.

இந்த இயக்கம் குறித்து பாஸ் உறுப்பினர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றாரவர்.

பாஸ் கட்சி குறித்து மற்றவர்களும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று இதர மக்களும் கூறுகின்றனர்.