சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் பற்றிக் கருத்துரைக்குமுன்னர் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கமளிப்புக்காகக் காத்திருக்கிறார்.
“சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜாயிஸ்),, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (மாயிஸ்) ஆகியவற்றிடமிருந்து இன்னும் விளக்கம் பெறவில்லை.
“அது பற்றி நிச்சயம் விவாதிப்போம். கடந்த வாரம் தண்ணீர் மீதும் மற்ற விவகாரங்கள் மீதும் கவனம் செலுத்தினோம்”, என்றாரவர்.
இரண்டு சமயத் துறைகளிடமிருந்தும் விளக்கம் பெறாமல் அவ்விவகாரம் பற்றிக் கருத்துரைப்பது நியாயமாகாது என்று அஸ்மின் கூறினார்.
இனிமேல்தான் அஸ்மினுக்கு, அம்னோ மறைமுகமாக கொடுக்கும் தலைவலியும் , தொந்தரவும் ஆரம்பமாகும் ! சமாளிப்பார் என்று நம்புவோம் !
ஜாயிஸ், மாயிஸ் எல்லாம் சரிதான். ஆனால் மாநில சுல்தான் ஒருவர் இருக்கிறாரே அவரை மறந்து விட்டீர்களே!
மீண்டும் பைபிள் மீது கை வைத்தால் மேலும் பல MAS விமானங்கள் காணாமல் போகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது ,,,ஜாக்கிரதை