எம்பி: டிபிகேஎல் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பதை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும்

floodகோலாலும்பூர் மாநகராட்சி  மன்றம்(டிபிகேஎல்) அடிக்கடி  ஏற்படும்  திடீர்  வெள்ளப்பெருக்குக்குத்  தீர்வுகாணும்  பொறுப்பை  நிபுணர்களிடம்  ஒப்படைப்பதே  நல்லது  என  டிஏபி  எம்பி  ஒருவர்  கூறுகிறார்.

“தீர்வு காண்பது  எப்படி  என்பது  டிபிகேஎல்லுக்குத்  தெரியவில்லை. எனவே, பொறுப்பை  நிபுணர்களிடம்  ஒப்படைக்கப்  பரிந்துரைக்கிறேன்”  என  லிம்  லிப்  எங்  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

அவர்கள்  அதற்கு  நல்ல  தீர்வு காணக்  கூடும்  என்றாரவர்.

மேலும், அண்மைய  வெள்ளத்தின்போது  விளைந்த  சேதங்களுக்குத்  தான்  பொறுப்பு  அல்ல  என்று  கூறியிருப்பதற்காகவும்  டிபிகேஎல்லை  லிம்  சாடினார்.

“வாகனங்கள்,  வாகன  நிறுத்துமிடத்தில்  நிறுத்தப்பட்டு, அதற்கான  கட்டணங்களை  டிபிகேஎல்  வசூலித்திருந்தால்  வெள்ளத்தினால்  ஏற்பட்ட  சேதங்களுக்கு  அதுதான்  பொறுப்பு”, என்றவர்  வலியுறுத்தினார்.