அதிக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக எரிபொருளுக்கான மானியத்தை குறைப்பதற்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு வரி விதிக்கும் முறை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று டிஎபி ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் அரிப் சாபிரி அப்துல் அசிஸ் கூறுகிறார்.
1,600சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கு அவற்றின் வேறுபட்ட வகைகளுக்கு ஏற்றவாறு வரியை நிர்ணையித்து அதனை வருடாந்திர சாலை வரிக்கான தொகையுடன் சேர்த்து விடலாம் என்றாரவர்.
“நாம் வசதியானவர்களைத் தண்டிக்க விரும்புகிறோம். ஆனால், வசதியற்றவர்களும்கூட தண்டனைக்குள்ளாகிறார்கள்”, என்று அவர் தமது தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திருத்தம் .மலேசியா எரிபொருள் உருபத்தி நாடு,வாங்கும் நாடு அல்ல.என் இந்த எற்றம் ஏன மாக்கல் புரிய வேண்டும்