பாஸ் எம்பி: பீர் குடிக்கும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுக்காதீர்

 

Beer1ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பரிலிருந்து அக்டோபர் வரையில் நடைபெறும் ஒரு பீர் கொண்டாட்டத்தில் ஒரு பிரபல்யமான பீரை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தட்டிகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகாகளும் அனுமதிக்கக்கூடாது என்று பாஸ் தெமெர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ருடின் ஹாசன் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் ஜெர்மன் பீர் கொண்டாட்டத்தைப் பின்பற்றி இங்கு கார்ல்ஸ்பெர்க் நடத்தும் அதன் அக்டோபர்பெஸ்ட் கொண்டாட்டம் இனிமேலும் அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

“பீர் குடிப்பதை அனுமதிக்கும் சமயத்தைச் சார்ந்தவர்களின் பீர் குடிக்கும் உரிமையை நான் மறுக்கவில்லை.

“ஆனால், பெடரேசனின் சமயமாக இஸ்லாம் இருக்கும் ஒரு நாட்டில் அந்த உரிமை அரவம் ஏதுமின்றி பின்பற்றப்பட வேண்டுமேயன்றி SONY DSCவிளம்பரப்படுத்தல் கூடாது”, என்று நஸ்ருடின் கூறுகிறார்.

இந்த பீர் விளம்பரத்தை திருமணத்திற்கு முந்திய உறவு மற்றும் விபச்சாரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட அவர், அவை மூடப்பட்ட கதவுக்குப் பின்னால் நடந்தாலும், அவ்வாறான விளம்பரங்கள் இஸ்லாமிய உணர்ச்சிகளுக்கு சவால் விடுகின்றன என்றாரவர்.

“பொது மக்களுக்கு அது விளம்பரம் செய்யப்படும் போது, அது பகிரங்க பாவம் ஆகிறது. ஆகவே, இதற்கு எதிராக எழ வேண்டிய பொறுப்பு அதிகாரத்தினருக்கும் இஸ்லாத்தை சார்ந்த அனைவருக்கும் உண்டு'”, என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இலாகாகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.