மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்) வெளிநாட்டவர் ஒருவரைத் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) அமர்த்திக்கொண்டு அந்நிறுவனத்தைச் சீரமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம்.
அவர் விமானப் போக்குவரத்துத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர் என ஒரு வட்டாரம் தெரிவித்ததாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
அவரைத் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க, எம்ஏஎஸ்ஸில் பெரும்பகுதி பங்குகளை வைத்துள்ள கஜானா நேசனல் பெர்ஹாட்டும் ஒப்புதல் வழங்கி விட்டதாகத் தெரிகிறது.
புதிய சிஇஓ, அடுத்த செப்டம்பர்வரை பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள அஹ்மட் ஜவுஹாரி யஹ்யாவிடமிருந்து பொறுப்புகளை ஏற்பார்.
யார் வந்தாலும் மாஸ் நிறுவனத்தை காப்பத முடியாது. இது நம் நாத்தின் தலைவிதி.
யார் வந்தாலும் மாஸ் நிறுவனத்தை காப்பத முடியாது.
நல்ல முடிவு .
நம் நாட்டில் திறமைசாலிகள் இல்லையா?எதற்கு வெளி நாட்டவர்,நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள் வெளி நாட்டவர்கள்.அரசாங்கம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.உள்ளூர் திறமைசாலிகளை அமர்த்தி மாஸ் நிறுவனத்தை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.நன்றி
உள்நாட்டில் உள்ள திறமைசாலிகள் அனைவரும் மலாய்க்காரர்கள். அவர்களால் முடியவில்ல என்பது நிருபணமாகிவிட்டதே!
திறமைசாலிகள் அதிகமாகவே இருகிறார்கள் ….இனம்பார்க்காமல் தேர்வு செய்யவேண்டுமே
இது தலைவர் பற்றி மட்டும் இல்லை. தகுதி வாய்ந்த வர்கள் திறைமை உள்ளவர்கள் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். தோல் பார்த்து எடுத்ததின் விளைவுதான் இப்போது நடக்கின்றது. 80க்கு முன்பு இருந்த நிலை திரும்ப வருமா? இதுவும் காகாதிரின் கைங்கரியம்தான். நான் அப்போது தற்காலிகமாக MAS இல் இருந்தேன்.
கோட்டா சிஸ்டம் ஆதியில் இருந்தது,இன்று போலவே எதிர்தனர் பின் கோட்டா சிஸ்டம் அகற்றப்பட்டது.பின்னர் முதலுக்கே மோசமாகி போனதால் மீண்டும் கோட்டா சிஸ்டம் கேட்டு அமல்படுத்தப்பட்டது.கோட்டா இருப்பதால் நம் பங்கை கேட்கிறோம் இல்லையென்றால் பேசவே முடியாது.அதிகம் அல்லது சமவுரிமை வேண்டுமானால் மக்கள் தொகயை பெருக்கவும் இல்லையேல் கிடைப்பதை பெற்று மௌனியாக வாழ்வதே நன்று.செய்யவேண்டியதை விட்டு விரண்டாவாதம் பேசி திரிகிறோம் நாம்,நாராயண நாராயண.