எம்பி: உதவித் தொகை சீரமைப்பா, கஜானா காலியாகிவிட்டதா?

mpஅண்மையில்  எரிபொருள்  விலை  உயர்த்தப்பட்டது  உதவித் தொகையைச்  சீரமைக்கும்  முயற்சியா  அல்லது    கஜானாவை  நிரப்பும்  முயற்சியா  என்பதை  அரசாங்கம்  விளக்க  வேண்டும்  என  கோலா  திரெங்கானு  எம்பி ராஜா  கமருல்  பஹ்ரேன்  ஷா ராஜா  அஹமட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உலக  அளவில்  எண்ணெய் விலைகள்  குறைந்து  வருவதைத்  தொடர்ந்து  மற்ற  அரசாங்கங்கள்  எண்ணெய்  விலைகளைக்  குறைக்க  முனைந்துள்ள  வேளையில்  மலேசியா எதிர்திசையில்  செல்கிறது  என்று  குறிப்பிட்ட  அவர்,  இது  எண்ணெய்  விலை  சரியும்  என்பதை  அரசாங்கம்  எதிர்பார்க்கவில்லை  என்பதைக்  காண்பிக்கிறது  என்றார்.

“கூட்டரசு  அரசாங்கத்தின்  ஆண்டு  பட்ஜெட்டில்  சுமார்  40 விழுக்காடு  எண்ணெய்  வருமானத்தைத்தான்  நம்பியுள்ளது.

“இது  தற்கொலைக்குச்  சமமான  ஒரு  திட்டமிடலாகும்”, என  கமருல்  தெரிவித்தார்.

அரசாங்கம்  எண்ணெய், எரிவாயு  வருமானத்தையே  அளவுக்கு  அதிகமாக  நம்பி  வந்துள்ளது. இப்போது  பல்வகைப்படுத்த “காலம்  கடந்துவிட்டத”  என்று  குறிப்பிட்ட  அவர், “இது  ஒரு  சோம்பேறி  அரசாங்கம்”, என்று  சாடினார்.