எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், டாக்டர் மகாதிர் மகன் உள்பட, 20 கோடீஸ்வரர்களிடம் எவ்வளவு வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மொக்சானி மகாதிர் தவிர்த்து அந்த முன்னாள் பிரதமருடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள டி.ஆனந்தகிருஷ்ணன், வின்செண்ட் டான் போன்ற கோடீஸ்வரர்கள் செலுத்திய வரித்தொகையும் தெரிய வேண்டும்.
“பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ள 20 கோடீஸ்வரர்களிடமிருந்து எவ்வளவு வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”, என அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவர், உள்நாட்டு வருமான வரி வாரியச் சட்ட (2014-இல் திருத்தப்பட்டது)த்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.
“உள்நாட்டு வருமான வரி வாரியத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமையைக் கொடுக்கிறது என்பதால் இந்தத் திருத்தத்தை ஆதரிக்கிறேன்”, என்றாரவர்.
சரியா கேட்டாய் நைனா . பெரிய பெரிய முதலைகளின்
வருமான வரி குறித்து யாரும் கவலைப்படவில்லை
இனி அவர்களுக்கும் ஆப்புதான் ,நைனா
சரியான கேள்வி மக்களும் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கிறார்கள் அரசாங்கம் தெரிய படுத்த வேண்டும் இது அரசாங்கத்தின் கடமை.நன்றி
சரியான கேள்வி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
நாந்தான் அரசாங்கம் நான் en கு….யை தான் உங்களுக்கு கட்டுவேன் என்னடா ம…. உங்களால் புடுங்க முடியும் புடுங்கங்க பார்ப்போம்
டத்தோஸ்ரீ நல்ல கேள்வி …..அதோடு மொத்த வரி பணம் எதற்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ள வும் ஆவலாக இருக்கிறது /
அரசாங்கத்தின் கடமை? எந்த காலத்தில் இவன்கள் எதற்காவது பதில் சொல்லி இருக்கான்களா? எல்லாவற்றையும் மூடி மறைத்து நம் காதில் பூசுற்றுவதே இவன்களின் கடமை.
நடவாததையே சொல்லி பழக்கப்பட்டவா,இங்கே ஆதரிக்கும் மக்கள் முதலில் தங்கள் வீட்டில் எவ்வளவு நகை,பணம் இருக்கிறது யென்று பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியுமா.கல்யாணம்,திருவிழாவில் எல்லாம் வெளியாகும் ஆனால் பணம் போன்றவை,நாராயண நாராயண.