சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற வியட்நாமிய கப்பலைக் காணோம்

18 பணியாளர்களுடனும்  5,000 டன்  எண்ணெயுடனும்  மலேசியாவுக்கும்  இந்தோனேசியாவுக்குமிடையில்  பயணித்துக்  கொண்டிருந்த   வியட்நாமிய  சரக்குக்  கப்பலொன்றைக்  காணவில்லை.

வியாழக்கிழமை  சிங்கப்பூரிலிருந்து  புறப்பட்டுச்  சென்ற  அக்கப்பல்  ஞாயிற்றுக்கிழமை  வியட்நாமிய  துறைமுகம்  சென்றிருக்க  வேண்டும்  என  வியட்நாம்  கடலோர மீட்புப்பணி  ஒருங்கிணைப்பு  மைய  துணை  இயக்குனர்  லூ  டக்  தங்  தெரிவித்தார்.

மோசமான  வானிலை காரணமாக  அது  காணாமல்  போயிருக்க  சாத்தியமில்லை.  ஏனென்றால்,  வானிலை நன்றாகவே  இருந்திருக்கிறது.

“அது  காணாமல்  போனதற்கு,  கடல்கொள்ளையர்கள்  உள்பட  வேறு  சாத்தியங்கள்  இருக்கலாம்”, என்றாரவர்.

காணாமல்போன  கப்பலைக்  கண்டிபிடிக்க  சிங்கப்பூர்,  இந்தோனேசியா,  மலேசியா  ஆகியவற்றின் உதவியை  வியட்நாம்  நாடியுள்ளது.

– dpa18 பணியாளர்களுடனும்  5,000 டன்  எண்ணெயுடனும்  மலேசியாவுக்கும்  இந்தோனேசியாவுக்குமிடையில்  பயணித்துக்  கொண்டிருந்த   வியட்நாமிய  சரக்குக்  கப்பலொன்றைக்  காணவில்லை.

– dpa