ஏப்ரல் 1-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்த மாற்றமுமில்லை

gstபொருள், சேவை  வரியால்   பொருள்  விலைகளில்  ஏறபடக்கூடிய  தாக்கம்  குறித்து  மக்கள்  கவலை  கொண்டிருந்தாலும்  அதன்  அமலாக்கம்  திட்டமிட்டபடியே  அடுத்த  ஆண்டு  ஏப்ரல்  முதல்  தேதி  நடைபெறும்  என்பதை  அரசாங்கம்  மீண்டும்  வலியுறுத்தியது.

அரசாங்கமும்  வணிகத்துறையும்  ஜிஎஸ்டி-யை  அமலாக்கத்  தயாராக  இருப்பதாய்  லிம்  லிப்  எங்(டிஏபி- செகாம்புட்)-குக்கு  வழங்கிய  எழுத்து வடிவிலான  பதிலில்  நிதி  அமைச்சு  கூறிற்று.

அரசாங்கம்  அந்தப்  புதிய  வரியின்  அமலாக்கத்தைத்  தள்ளிவைக்குமா  என்று லிம்  கேட்டிருந்தார்.

“அது  தள்ளிவைக்கப்படாது”, என  அமைச்சு  கூறியது.

அரசாங்கத்தின்  விழிப்புணர்வு  இயக்கத்தால்  மக்கள்  அதை  “ஏற்றுக்கொள்ள”த்  தயாராகி  விட்டனர்..

“நாட்டின்  மேம்பாட்டுக்கு  ஜிஎஸ்டி  தேவை  என்பதை  மக்கள்  உணர்கிறார்கள்”, என்றது  கூறிற்று.