கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.
“வருமான வரி வாரியம் வருமான வரி சட்டம் 1967, செக்சன் 138 க்குக் கட்டுப்பட்டு அதை வெளியிட முடியாதிருக்கிறது”, என்றவர் கூறினார்.
ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
20 மலேசிய கோடீஸ்வரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வருமான வரியைத் அறிய விரும்புவதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டிருந்த கேள்விக்கு அஹ்மட் மஸ்லான் இவ்வாறு பதிலளித்தார்.
அன்வார் இப்ராகிம் நிதி அமைச்சராக இருந்தவராயிற்றே. அப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாமலா அவர் கேள்வி கேட்டார்?
அன்வார் தெரியமல கேட்டுருபார் …ரகசியம்
இங்கு எதுதான் ரகசியமில்லை ? எதை எல்லாம் மறைக்க முடியுமோ அதெல்லாம் ரகசியம்-
அப்படிஎன்றால் சட்டத்தில் எங்கோ ஓட்டை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.இந்த நாட்டில் சாதாரண தொழிலாளியும் வரி செலுத்துகின்றான்.பணக்காரனும் வரி செலுத்துகின்றான்.ஆனால் பணக்காரனுக்கு மட்டும் அதில் சலுகை காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.சட்டம் என்பது எல்லோருக்கும் சமம்.