பாலியல் வன்முறை குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக முகம்மட் ரிஸால்மான் நியுசீலாந்துக்கு அனுப்பப்படுவதில் காணப்படும் தாமதம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக மலேசியா ரிஸால்மானை நியுசீலாந்துக்கு திருப்பி அனுப்பும் என்று நஜிப் கூறியிருந்ததை சுட்டிக் காட்டிய கோபிந்த் சிங், இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான விவகாரம் என்பதை நஜிப் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
சம்பவம் நடந்து ஐந்து மாதங்களாகி விட்டன. ஆனால், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இது தவறான சமிக்கையை காட்டுகிறது என்றாரவர்.
நஜிப் உண்மை கூறுவான் மக்கள் ஆஆ வென்று வாய் பொலந்து பார்க்க வேண்டியதுதான்