அஸ்ரி: முஸ்லிம்-அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும்

 

Non-muslim studentsமுஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையில் நல்லுறவை பேணுவதற்கு முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் சேருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஸைனோல் அபிடின் பரிந்துரைக்கிறார்.

தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் உறுப்பினராக இருக்கும் அஸ்ரி, பல்லின மற்றும் பல்சமய சமுதாயங்களுக்கான தலைவர்களை உருவாக்குவதற்கு இது முக்கியனானது என்றார்.

“நமது நாட்டிலுள்ள இஸ்லாமிய பள்ளிகளில் முஸ்லிம்களுக்கு மட்டுமே இடமுண்டு. அதன் விளைவாக, அப்பள்ளிகளிலிருந்து தேர்வு பெற்றவர்கள் மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லை. இது தாய்மொழிப்பள்ளிகளுக்கும் பொருந்தும்.

“கிறிஸ்துவ மிசனரி பள்ளிகள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை அனுமதிக்கும் போது, நாம் ஏன் செய்யக்கூடாது/”, என்று அஸ்ரி நேற்று அவரது முகநூலில் எழுதியுள்ளார்.

Non-muslim students1சீனமொழிப்பள்ளிகள் அரசாங்க எதிர்ப்பு உளப்பாடுகளை வளர்ப்பதால் அவை மூடப்பட வேண்டும் என்று அம்னோ தொகுதித் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வரும் வேளையில், அஸ்ரி இவ்வாறு கூறுகிறார்.

ஆனால், அம்னோவின் இக்கூற்றுக்காக பாரிசான் பங்காளிக் கட்சியான கெராகான் இக்கோரிக்கை அடிப்படையற்றது என்று அம்னோவை சாடியுள்ளது.

இஸ்லாமிய பள்ளிகளை முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு திறந்து விடுவது இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை குறைக்க உதவும் என்றும் அஸ்ரி கூறினார்.

இவரும் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா என்ற கேள்வி எழுகிறது.