நாடாளுமன்றத்துக்கு வெளியில் எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

parlஇன்று காலை  சுமார்  100 பேர்  சிவப்பு  உடை  தரித்து நாடாளுமன்ற  இல்லத்துக்கு  வெளியில்,  எரிபொருள்  விலை  உயர்வுக்கும்  பொருள், சேவை  வரிக்கும்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  பாடல்கள்  பாடியும்  சுலோகங்களை  முழக்கியும்  எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.

பின்னர்  அவர்களில்  பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்சான்  காயாட்டும்  என்ஜிஓ-களின்  பிரதிநிதிகளும்  சிலரும்,  பிஎன் ஆதரவு  எம்பி-களையும்  பக்கத்தான்  எம்பிகளையும்  சந்தித்து  மகஜர்  கொடுப்பதற்கு  நாடாளுமன்றத்துக்குள்  அனுமதிக்கப்பட்டனர்.

ரோன் 95,  டீசல் எண்ணெய்  ஆகியவற்றின்  விலைகள்  அக்டோபர்  2-இல்  உயர்த்தப்பட்டன. ஜிஎஸ்டி  அடுத்த  ஆண்டு  ஏப்ரல்  முதல்  நாள்  அமலுக்கு  வருகிறது.