அடுத்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பள உயர்வு பெறுவர்.
அவர்களின் சம்பள உயர்வுக்குக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று பிஎன் எம்பிகள், செனட்டர்கள் அடங்கிய கூட்டமொன்றில் கூறினார்.
சம்பள உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. கேட்டதற்கு அதைத் தெரிவிக்க மறுத்தார் பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம்.
“பிரதமர் ஒப்புக்கொண்டாலும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
“ஆனால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் அது நடைமுறைக்கு வரலாம்”, என்றாரவர்.
எரிவாயு விலை உயர்வு. மக்களுக்கு அதிகச் செலவு/ வேதனை. எம்பிகளுக்கு விரைவில் சம்பள உயர்வு. சூபெரான ஐடியா….!!!
ஆமாம்…! ஆமாம்…! அவசியம் வேண்டும். விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு …அவர்களையும் தாக்கத்தானே செய்யும்! எதிர்கட்சி என்பதால் வேண்டாம் என்றா சொல்லுவார்கள்!
எல்லாம் நம்முடைய தவறு. ஈன ஜென்மங்களை நம்முடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது – அதிலும் அம்நோகாரன் கள் தேர்ந்தெடுத்தது அரைவேக்காடுகள் -பிறகு என்ன ?
அவர்களுக்கு ஏன் எதற்காக சம்பள உயர்வு? அண்மைய விலைவாசி அவர்களை எந்த அலவுக்கு பாதித்தது என்பதை சொல்ல முடியுமா? அல்லது அண்மைய எரிபொருள் விலை உயர்வால் அவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனரா? நாங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் பிரதிநிதிகள் அவர்கள். நாங்கள் இங்கே பலமே இல்லாமால் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களுக்கே திண்டாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஏன் சம்பள உயர்வு? மாற்றரசுக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் போனஸ்? அவர்கள் மட்டும்தான் ஓட்டுப் போட்டார்களா? ரல்லது அவர்களின் ஓட்டு மட்டும்தான் வேண்டும், அவகளின் நலன் முக்கியம் இல்லையா?
அவர்களுக்கு ஏன் எதற்காக சம்பள உயர்வு? அண்மைய விலைவாசி அவர்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை சொல்ல முடியுமா? அல்லது அண்மைய எரிபொருள் விலை உயர்வால் அவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனரா? நாங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் பிரதிநிதிகள் அவர்கள். நாங்கள் இங்கே ‘சம்’ பலமே இல்லாமால் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களுக்கே திண்டாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஏன் சம்பள உயர்வு? மாற்றரசுக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் போனஸ்? அவர்கள் மட்டும்தான் ஓட்டுப் போட்டார்களா? தனியாரின் ஓட்டு மட்டும்தான் வேண்டும், அவர்களின் வாழ்க்கை நலன் முக்கியம் இல்லையா?
நர பயன்கள் .