கோலாலும்பூரில் ஏற்படும் திடீர் வெள்ளத்துக்குத் தீர்வுகாண வல்லுனர்களை அமர்த்த சாத்தியமில்லை என கோலாலும்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) தலைமைச் செயலாளர் முகம்மட் அமின் நோர்டின் கூறினார்.
“திடீர் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பது எளிதான காரியமல்ல. அது பல தரப்பினர் சம்பந்தப்பட்ட வேலை”, என்றாரவர்.
டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங், மாநகர் வெள்ளத்துக்கு நிபுணர்களின் உதவியுடன் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருப்பதற்கு முகம்மட் அமின் இவ்வாறு பதிலிறுத்தார்.
அவ்விவகாரத்துக்குத் தீர்வுகாண பல்வேறு துறைகளும் ஒவ்வொரு மாதமும் கூடிப் பேசுவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், ஏதாவது தீர்வு காணப்பட்டிருக்கிறதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.