எம்எச்17 ஆய்வுக்குழு ஏப்ரலில்தான் விமானம் விழுந்த இடத்துக்குச் செல்லும்

mh 17மலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ்)த்தின் எம்எச்17 விழுந்து  நொறுங்கிய  சம்பவத்தைப் புலனாய்வு  செய்துவரும்  அனைத்துலகக்  குழு  அடுத்த  ஆண்டு  ஏப்ரலில்தான் விமானம்  விழுந்து நொறுங்கிய  இடத்துக்கு  மறுபடியும்  செல்லும்  எனத்  தெரிகிறது.

மலேசியா, ஆஸ்திரேலியா,  நெதர்லாந்து  ஆகிய  மூன்று  நாடுகளைக்  கொண்ட அனைத்துலகக்  குழு,  குளிர்காலத்தையும்  அப்பகுதியில்  தொடரும்  சண்டைகளையும்  கருத்தில்  கொண்டு  புலனாய்வுப்  பணியைத்  தற்காலிகமாக  நிறுத்திவைக்க  முடிவு  செய்திருப்பதாக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“அங்கு  சண்டை  நடக்கிறது. இன்று  காலையில்கூட  பிரிவினைவாதிகளுக்கும்  உக்ரேன்  படையினருக்குமிடையில்  டொனட்ஸ்க்  விமான  நிலையத்தில்  துப்பாக்கிச்  சண்டை  நடந்ததாகக்  கேள்விப்பட்டேன்”, என்றவர்  தெரிவித்தார்.