அரசியலுக்காக சீனப் பள்ளிகளைப் பலியிடாதீர்

srjkஅம்னோ அரசியல்  ஆதாயத்துகாக  சீனத்  தாய்மொழிப்  பள்ளிகளைப் “பலிகடா”  ஆக்கக்  கூடாது  என  கெராக்கான் வலியுறுத்தியுள்ளது.

அம்னோ  செராஸ்  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  சீன  மொழிப் பள்ளிகளை  மூட  வேண்டும்  என்று  மொழிந்திருப்பது குறித்து  எதிர்வினையாற்றிய  கெராக்கான்  தலைமைச்  செயலாளர்  லியாங்  டெக்  மெங், பள்ளிகளை  மூடச்  சொல்வது  “பாவச்  செயலாகும்”  என்றார்.

“சீனமொழிப்  பள்ளிகளை  மூடுவது  பாவச் செயலாகும்; கல்வி  புனிதமானது. அரசியல்  காரணங்களுக்காக  மாணவர்களைப்  பலிகடா  ஆக்கக்  கூடாது”, என்றவர்  ஒர்  அறிக்கையில் கூறினார்.

மலாய்க்காரர்களிடமும்  இந்தியர்களிடமும்  பாகுபாடு  காட்ட  வேண்டும், இனங்களிடையே  பிளவை  உண்டுபண்ண  வேண்டும்  என்று  எந்தப்  பாடநூலும் சீன  மாணவர்களுக்குப்  போதிப்பதில்லை.

“சீனமொழிப்  பள்ளிகள்  தேசிய  ஒற்றுமைக்குத்  தடைபோடுவதாக  கூறவது  அடிப்படையற்றது,  கோமாளித்தனமானது”, என்று  லியாங்  குறிப்பிட்டார்.