கேலிச் சித்திரங்களைப் பார்த்து சிரித்து விட்டுப்போக வேண்டியதுதான்; ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளக் கூடாது

judge உரைநடை  எழுத்துகளைப்  பார்ப்பதுபோல் கேலிச்  சித்திரங்கள், நையாண்டி, அங்கதம்  முதலியவற்றைப் பார்க்கக்  கூடாது  என்கிறார்  மேல்முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதி  ஒருவர்.

நேற்று, ஸுனாரின் கேலிச்  சித்திர  நூல்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த  தடையை  நீக்கித்  தீர்ப்பளித்த  நீதிபதி  முகம்மட்  அரிப்  முகம்மட்  யூசுப்,  கேலிச்  சித்திரங்களின்  நோக்கமே   “மிகைப்படுத்துதல், வாழ்க்கையைக்  கேலி  செய்வது, கிண்டல்  செய்வதுதான்”   என்றார்.

அதில் “அரசியல்  வாழ்க்கையும்”  அடங்கும்.

“அவை  படிக்கும்போது (பெரும்பாலும்  பார்க்கப்படுவதுதான்) நகைப்பை உண்டுபண்ணலாம், வாழ்க்கையின்  கேலிக்குரிய  பகுதிகளை  நினைவுபடுத்தலாம்”, என்றாரவர்.

ஸுனாரின் கேலிச் சித்திரங்களை “நயமற்றவை, மரியாதைக் குறைவானவை”  என்று  வேண்டுமானால்  கூறலாம்.  ஆனால், அவை  பொது ஒழுங்கைக்  கெடுப்பதாகக்  கூறுவதற்கு  எந்த  ஆதாரமுமில்லை  என்று  முகம்மட்  அரிப் கூறினார்.