நஜிப்பின் படத்திடம் செருப்பைக் காட்டுவதா?, அம்னோ இளைஞர் சீற்றம்

Slipper1கடந்த புதன்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியில் நடந்த ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஓர் ஆர்ப்பாட்டக்காரர் அவர் வைத்திருந்த ஒரு போஸ்டரில் காணப்பட்ட நஜிப்பின் படத்திற்கு பக்கத்தில் ஒரு செருப்பை பிடித்துக் கொண்டிருந்தார்.

அம்னோ இளைஞர் பிரிவின் செயற்குழு உறுப்பினர் அர்மாண்ட் அட்ஹா அபு ஹனிபா அச்செயலைத் துடுக்குத்தனமானது மற்றும் பண்பற்றது என்றார்.

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நட்டத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம் அமைதியாக கூடுதல் சட்டத்தை மீறியுள்ளதோடு ஜனநாயக Slipper2நடைமுறைகளை களங்கப்படுத்தி விட்டது என்றாரவர்.

“அந்த நபரின் பண்பற்ற நடத்தை நாட்டில் நல்லிணக்கம் உருவாகுவதற்கு எந்த வகையிலும் உதவவில்லை.

“அந்த நபர் நாட்டின் சட்டங்களை அல்லது அமைதியாக கூடுவதற்கான உரிமையை மதிக்கவில்லை”, என்று அம்னோ ஓன்லைன் அறிக்கையில் கூறினார்.

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அர்மாண்ட் பக்கத்தான் ரக்யாட்டின் கருவிகள் மற்றும் கைப்பாவைகள் என்று வர்ணித்தார்.