ஆயர்: இப்ராகிம் எல்லை மீறி விட்டார்

bishopமலாய்மொழி  பைபிள்களை எரிக்கப்போவதாக  மிரட்டியதன்வழி  இப்ராகிம்  அலி  எல்லை   மீறி  விட்டார்  என  கத்தோலிக்க  ஆயர்  பால்  டான்  ச்சீ  இங்  கூறினார்.

“சமயங்கள்  புனிதமாகக்  கருதும்  நூல்களைக்  கொளுத்தப்போவதாகக்  கூறுவது  பல  சமயத்தவரும் வாழும்  நாட்டில்  சினமூட்டும்  பேச்சாகும்.

“அதற்கு  அரசாங்கம்,  இஸ்லாத்தைத்  தற்காக்கும்  நோக்கில்தான்  இப்ராகிம்  ஆவேசப்பட்டு அவ்வாறு  கூறிவிட்டார்  என  விளக்கமளித்திருப்பது  பொருந்தாத  வாதமாகும். மற்றவர்களின்  புனித  நூல்களைக்  கொளுத்துவதன்  மூலம்  ஒருவர்  தன்  சமயத்தைப் பாதுகாக்க  முடியாது”, என்றவர்  கூறினார்.

மாறுபட்ட  கருத்துகள்  சொன்னாலோ,  இனத்தைப்  பற்றி அல்லது  சமயத்தைப்  பற்றி  சாதாரணமாகவே  மரியாதைக்குறைவாக  பேசி  விட்டாலோ  தேச  நிந்தனைச் சட்டத்தின்கீழ்  விசாரணை  செய்யப்படுவதை  ஆயர்  பால்  சுட்டிக்காட்டினார்.

“அப்படி  இருக்க,  பைபிள்களைக்  கொளுத்தப்போவதாக  மிரட்டல்  விடுக்கப்பட்டதை  இஸ்லாத்தைத்  தற்காக்கும்  நோக்கில்  சொல்லப்பட்டது  என்று  காரணம்காட்டி  நடவடிக்கை  எடுப்பதைத்  தவிர்ப்பது  ஏன்?”, என்று  ஆயர்  வினவினார்.