மலாய்மொழி பைபிள்களை எரிக்கப்போவதாக பெர்காசா விடுத்த மிரட்டலை புத்ரா ஜெயா தற்காத்து பேசியிருப்பது மலேசிய மனித உரிமை ஆணையத்துக்கு (சுஹாகாம்) அதிர்ச்சி அளித்துள்ளது.
“மலாய்மொழி பைபிள்களைக் கொளுத்தச் சொன்னது சமுதாயத்துக்கு விடுக்கப்பட்ட மருட்டல் அல்ல, இஸ்லாத்தைத் தற்காப்பதற்காகவே அவ்வாறு சொல்லப்பட்டது என அரசாங்கம் அதை நியாயப்படுத்துவது கண்டு சுஹாகாம் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைவதாக”, சுஹாகாம் தலைவர் ஹஸ்மி அகாம் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி, புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அளித்த ஒரு பதிலில் அதை நியாயப்படுத்தி இருந்தார்.
இவர் அமைச்சர இருபதற்கு தகுதி அற்றவர் .
1976ல் துன் அப்துல் ரசாக் இறந்த பிறகு,அந்த பெக்கான் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர், ரசாக்கின் மகனான தற்போதைய நஜிப். இதற்கு முன்பு நஜிப்பின் சில்மிஷங்கள் என்னவென்று லண்டன் வீதிகளை கேட்டால் சொல்லும். அவ்வளவு ஏன், அல்துந்தாயா ‘ஆவி’யை கேட்டாலே புட்டு புட்டு வைக்கும். தலைவரின் லட்சணமே இப்படியென்றால் தற்போதைய இந்த ‘பொடிசுகளின்’ தரத்தை கேட்கவா வேண்டும்? நல்ல நாடு, நல்ல மந்தி[ரி]கள்!
ALLAH சொல்லை இஸ்லாம் தவிர வேறு இனத்தவர்கள் உபயோகிக்க கூடது என்று உலகளவு தெரிய படுத்துங்கள் பாராட்டுக்கள் .
அமைச்சர், தானும் தன குடும்பமும் வயிறு கழுவ அரசியல் நோக்கத்துடன் சொன்னதை ஏன் பெரிது படுத்துகிறீர்? ஏதோ அறிவிலி அமைச்சர் ஒருவர் அப்படிச் சொன்னதாய் எண்ணிக் கொள்ளுவோம்.!!!!