செனட்டர்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மிகவும் குறைவு

senatorமாற்றுத்திறனாளிகளுக்குக்  கொடுக்கப்படும்  உதவித்  தொகையில் ரிம50 உயர்த்தப்பட்டிருப்பது  அவர்களின்  தேவைக்குப்  போதாது  என  செனட்டர்  கே.பத்மாவதி  கூறினார்.

பத்மாவதி, செனட்டராக  நியமிக்கப்பட்டிருக்கும்  நாட்டின்  முதலாவது  மாற்றுத்திறனாளி  ஆவார்.

“டிசம்பர், ஏப்ரல், ஜூன்  மாதக்  கூட்டங்களில், ரிம300  அலவன்ஸ்  கூட்டப்பட  வேண்டும்  என்று  கோரினேன். அது ரிம500 ஆக உயர்த்தப்பட்டது. அது  பயனானது”,  என  வேலை  செய்யும்  மாற்றுத்திறனாளிகளுக்கான  அலவன்ஸ்  உயர்த்தப்பட்டதை  அவர்  குற்ப்பிட்டார்.

அதேபோல் வேலை  செய்யாதிருக்கும்  மாற்றுத்திறனாளிகளின்  அலவன்சும்  ரிம150-இலிருந்து  ரிம300  ஆக  உயர்த்தப்பட வேண்டும்  என்று  பத்மாவதி  கோரி  வந்தார்.

“ஆனால், இப்போது  கொடுக்கப்பட்டிருப்பது  ஏமாற்றமளிக்கிறது. ரிம50 கூட்டப்பட்டது  பொருளற்றது”, என்றாரவர்.

மாற்றுத்திறனாளிகள்  அன்றாடத்  தேவைகளுக்கு  அதிகம் செலவிட  வேண்டியிருப்பதாக  அவர்  கூறினார்.