தேச நிந்தனை குற்றச்சாட்டுகள்: ஏஜி அம்னோ கட்டளைப்படி நடக்கிறாரா என்பதை விளக்க வேண்டும்

 

AG1 தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் எதிராக நடத்தப்படும் வேட்டை அம்னோவுடன் நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட சந்திப்புடன் சம்பந்தமுடையதா என்பதை அட்டெர்னி ஜெனரல் (ஏஜி)) விளக்க வேண்டும் என்று பக்கத்தான் இன்று கேட்டுக்கொண்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேச நிந்தனை குற்றச்சாட்டு நடவடிக்கைகள், அவற்றில் பெரும்பான்மையாவை அம்னோ உறுப்பினர்கள் செய்த போலீஸ் புகார்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சந்திப்பிற்குப் பின்னர் தொடங்கியுள்ளன என்று பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார்.AG2

“அம்னோ தலைவர்களின் உத்தரவுப்படி ஏஜி செயல்படுகிறாரா?

“யார் மற்றும் எந்த அம்னோ டிவிசன்கள் இந்த சர்ச்சைக்குரிய சந்திப்பில் சம்பந்தப்பட்டுள்ளவை?”, என்று இன்று பாஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டதில் அவர் வினவினார்.

இக்கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், அது ஏஜி தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற தோற்றத்தை அளிக்கும் என்றாரவர்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் அவருடன் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, டிஎபி உதவித் தலைவர் தெரசா கோக், ஷா அலா,ம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட், ஜிஎச்எஎச் அமைப்பின் தன்னார்வலர்களான யாப் ஸ்வி செங் மற்றும் ஹிசாமுடின் ரயிஸ் மற்றும் அடாம் அலி ஆகியோரும் இருந்தனர்.