இன்று விசாரணை செய்யப்பட்டவிருந்த இஸ்மா தலைவர் அப்துல்லா சேய்க்-கின் தேச நிந்தனை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் சட்டப்பூர்வ தன்மை குறித்து யுனிவர்சிடி மலாயா இணைப் பேராசிரியர் அஸ்மி ஷாரோம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் முடிவு தெரியும்வரை விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என வழக்குரைஞர் சலிம் பஷீர் கேட்டுக்கொண்டதை ஏற்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
அவ்வழக்கு இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு விசாரிக்கப்பட விருந்தது.
ஒத்திவைப்புக்கு அரசு வழக்குரைஞர் அபாஸப்ரி முகம்மட் அப்பாஸும் மறுப்புத் தெரிவிக்கவீல்லை.
அப்படியென்றால், எல்லா தேச நிந்தனை குற்ற வழக்குகளையும் தள்ளிப் போடுவதே நியாயமானது.. செய்யுமா இந்த AG அலுவலகம்???? அல்லது நொள்ளைக் கண்ணன் நீதிமன்றம் ஒரு கண்ணை மறைத்து ஒரு தலைப் பட்சமாய் அநீதி வழங்குமா????