என்ஜிஓ: போலீஸ் சச்சரவைத் தடுக்கவில்லை

ngoபினாங்கில்,  பேச்சாளர்  மூலையில்  போலீசார்  இருந்தாலும்  அவர்கள்  சமூக  ஆர்வலர்களிடம்  வன்முறையில்  நடந்துகொண்ட  தேச  நிந்தனைச்  சட்ட-ஆதரவுத்  தரப்பினரைத்  தடுத்து  நிறுத்தவில்லை.

அந்தக்  கும்பல், சமூக  ஆரவலர்களையும்  பார்வையாளர்களையும் “பிடித்துத்  தள்ளியும், விரட்டவும்,  மிரட்டவும்”  முனைந்து நிலைமை  கட்டுமீறிப்  போனதும்தான்  போலீஸ்  தலையிட்டது  என  Gerakan Hapuskan Akta Hasutan (தேச நிந்தனைச்  சட்டத்தை  ஒழிப்போம் இயக்கம்) கூறியது.

“போலீசார்  முன்கூட்டியே  தலையிட்டிருந்தால்  இரு  தரப்பினருக்குமே  பேசும்  சுதந்திரம்  கிடைத்திருக்கும்  ஆனால்,  அப்படி  நடக்கவில்லை.

“அப்படிச் செய்யாததால்  கும்பலின்  திட்டம்  மட்டும்  நிறைவேறியது”, என  அவ்வியக்கம்  கூறியது.

அவ்வியக்கம்  நேற்று  மாலை மணி  6-க்கு  பினாங்கில்  எஸ்பிலேனேட்-டில்  பேச்சாளர்  மூலையில்  ஒரு  கூட்டத்துக்கு  ஏற்பாடு  செய்திருந்தது.

அதன்  கூட்டம்  தொடங்கியபோது,  தேச  நிந்தனைச்  சட்டத்தை  ஆதரிக்கும்  கும்பல்  ஒன்று  தலையிட்டுக்  குழப்பம்  விளைவித்தது.