சாபாவின் மாநில சீரமைப்புக் கட்சி(எஸ்ஆர்பி)த் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மைகார்ட் கொடுக்கப்பட்டு அம்னோ உறுப்பினர்களாக்கப்படுவதாகக் கூறுகிறார்.
இது இப்போது சாபாவில் ஒரு புது மிரட்டலாக உருவாகி வருவதாகக் கூறிய அவர் பிலிப்பினோக்களுக்கு மைகார்ட் கொடுப்பது குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
“இப்பதியவர்கள் மைகார்ட் பெறுவதற்கும் அம்னோ உறுப்பினர்களாவதற்கும் பூகிஸ் இனத்தவரும்(இந்தோனேசியர்கள்), இந்திய என்ஜிஓ-களும் உதவுகிறார்கள்”, என ஜெப்ரி கூறினார்.
“அரசியல் நோக்கத்துக்காகச் சேர்க்கப்படும் ‘இப்புதிய’ மலேசியர்களால் விரைவில் வேறு வகை பிரச்னைகள் உருவாகலாம். இஸ்லாமிய தீவிரவாதம்கூட இறக்குமதி செய்யப்படலாம்”, என்றவர் எச்சரித்தார்.
நல்லதுதானே ! நாடு உருப்படாமல் போவதற்கு.
இதுவும் ஒரு சிறந்தவழிதான் .
எவ்வளோ செய்தவர்கள் இதை செய்தால் என்ன கெட்டுப்போகிறது ?
ஆஹ் சரியான போட்டி
இந்தியர்கள் என்றால் அவர்கள் நிச்சயம் முஸ்லீம்கலாகதான் [மாமாக்]இருப்பார்கள். முஸ்லீம் பெயரை கொண்டிருந்தாலே கண்ணை மூடிக் கொண்டு குடியுரிமை கொடுத்து விடுகிறார்கள்.இங்கு முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர்களை விட எண்ணிக்கையில் கூடுதலாக இருக்க வேண்டும் என்ற இனவாத கொள்கையின் பிரதிபலிப்புதான் அது.
இது காகாதிர் காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கின்றது. ஒருகாலகட்டத்தில் மலாய்க்காரர்கள் மலாய்க்காரர் அல்லாதவரை விட குறைவே- அனால் இன்று? கள்ளகுடிஎறிகள் அம்னோ ஆதரவுடன் பிலிப்பின்ஸ் இந்தோ காரன்களை இங்கு கொண்டு வந்தி நிரப்பிவிட்டான்கள் -அத்துடன் கட்டுப்பாடு இல்லாமல் மலாய்க்காரன் களை குழந்தை பெற தூண்டி எல்லா ஆதரவும் கொடுத்து இன் நிலைக்கு கொண்டுவந்தான் — அதிலும் சீனர்களும் இந்தியர்களும் வெளி நாடுகளில் தஞ்சமடைய தொடங்கினர் 1969 பிறகு .
இங்கே இப்போது மலேசியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யார் யார்? மலாய்காரனா? சீனனா அல்லது தமிழனா? எவனுமே இல்லை என்பது தான் பொருத்தமான பதில். நாட்டின் ஒவ்வொரு முக்கிய பகுதியயும், பங்களாதேசி, பர்மாக்காரன், வியட்னாம்காரன், இந்தோக்காரன், நேப்பால்காரன் என்று அவனவனும் ஆக்கிரமித்துக் கொண்டான். பசார் மாலமில் கூட பங்களாக்காரன் ஆதிக்கம் தான். இது அனைத்து உலக மலேசியாவாகி ரொம்ப காலமாச்சே..சீக்கிரம் ‘மாஸ்’ கூட அந்நியன் ஆளப்போகிறான். போகிற போக்கில் அப்படியே மந்திரிசபயையும் கொஞ்ச காலத்துக்கு அந்நியனிடம் ‘வாடகைக்கு’ விட்டு விடலாம்.