கடந்த வாரம், நாடாளுமன்றத்திற்கு வெளியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நஜிப் போஸ்டர் மீது செருப்பைக் காட்டியவர் மீதான விசாரணையை போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட அந்த நபரை போலீசார் கடந்த சனிக்கிழைமை கைது செய்ததாகவும் அவரை அன்றே போலீஸ் பிணையில் விடுவித்ததாகவும் செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஆர். முனுசாமி மலேசியாகினியிடம் கூறினார்.
அந்நபர் தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 504 மற்றும் 506 இன் கீழ் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேல்நடவடிக்கைக்காக விசாரணை ஆவணங்கள் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று முனுசாமி மேலும் கூறினார்.
மலேசிய போலீசா கொக்கா? அதன பார்த்தேன் ! என்னாட அம்னோகாரன் கிட்டயும் , நம்ப ஐஹி பி க்கிட்டேயிருந்து இன்னும் ஒன்னும் வரவில்லையேனு?
நான் அன்றே சொன்னேனே — அம்னோ குண்டர்கள் இது போன்ற வற்றுக்குதான் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றார்களே –இதை அறியாமல் நாமே அவங்கள் வலையில் விழ வேண்டுமா?
திருடனைப் பிடிக்க நேரம் இல்லை. இப்படி வெட்டி வேலை செய்யிறதுக்கு இந்த கேனத் தமிழனுக்கும் அந்த கேனப் போலீசுக்கும் நேரம் நிறையவே இருக்கு.
எய்தவன் யாரோ…? எங்கோ இருக்க …அம்பு மாட்டிக் கொண்டது..?
ஏன் ஐயா உமக்கு இந்த வேலை ? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி கணக்காய்!
அவருக்கு நேரம் சரியாய் எலி
ஒரு இனத்தின் மரியாதையை, அந்த இனம் பேசுவதிலும், பளுகுவதிலும்,ஒழுக்கமாக நடுந்து கொள்வதை பொறுத்திருக்கிறது. இது ஒரு ஆவேசத்தில் செய்த மடத்தனமான செயல். அடுத்து வரும் தந்ததையர்க்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்காது. இது போன்ற செயள்கை இன ஒட்ட்ருமையை பிளவுபடுத்தும். இனியும் இப்படி செய்யாதிர்கள்.
இந்த செயலை செய்தவன் தமிழன் …. ஆனால் குறை கூருவது அம்னோவை …….. இப்படி ஒரு சம்பவம் நடத்திருக்க கூடாது …. அதை கண்டிப்பதை விட்டு விட்டு ….ஏன் மற்றவர்களை சம்மத படுத்த வேண்டும் … குறை கூறுவதை விட்டு விட்டு ….. நம் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை பதிவு செய்தால் சிறப்பு ..
அவர் செய்தது தவறு தான். ஆனால் இதனை ஆரம்பித்து வைத்தவர்கள் அம்னோவினர் தானே! பினாங்கில் அவர்கள் பண்பாடு இல்லாதவர்கள் எனக் காட்டினர் .இப்போது அது தொடர்கிறது! காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை! குற்றம் காவல்துறை மீது தான்!