அடுத்த ஆண்டில் அதிகரிக்கப்படும் 1மலேசியா மக்கள் உதவித்தொகை(பிரிம்), பொருள், சேவை வரியால்(ஜிஎஸ்டி) ஏற்படும் செலவுகளைச் சரிக்கட்ட போதாது என்கிறார் கிளானா ஜெயா எம்பி வொங் சென்.
ஜிஎஸ்டிக்காக நான்கு பேரடங்கிய ஒரு குடும்பம் சுமார் ரிம1,080 செலவிட வேண்டிவரும்.
இதனுடன் ஒப்பிடும்போது, பிரிம் உதவித்தொகையில் ரிம300 தான் கூட்டிக் கொடுக்கப்படுகிறது. மாதம் ரிம3,000-த்துக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்கள் இப்போது ரிம650 உதவித்தொகை பெறுகின்றன. அது, இனி ரிம950 ஆக உயரும். ரிம3,000-த்தும் ரிம4,000-த்துக்குமிடையில் வருமானம் பெறும் குடும்பங்கள் பெற்றுவரும் ரிம450 உதவித்தொகை ரிம750 ஆக உயரும்.
“ரிம300-ஐக் கொண்டு, உணவுக்காக செலவிடுவதில் மிகவும் கருமித்தனம் காட்டினால் சிறிதளவு சேமிக்கலாம். ஆனால், நம்மில் பெரும்பாலோர் மேலும் ஒரு ரிம400 செலவிட வேண்டியிருக்கும்.
“எனவே, இது ஏழைகளுக்கு ஒரு சுமைதான்”.
நேற்றிரவு, சுபாங் ஜெயாவில், ஒரு கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.
பிரிம் உதவித்தொகை நிராகரிக்கப்பட்ட, வருமானமில்லாத வயதான மக்களைப்பற்றி அரசாங்கம் கவலைப்பட்டதாக தெரியவில்லையே.