உதவித் தொகை கொடுப்பதற்கு போக்குவரத்து-தொடர்பான வருமானமே போதும்

petrolமலேசியாவில்  போக்குவரத்துத்  தொடர்பான  வரிகள், லைசென்ஸ்  கட்டணங்கள்  முதலியவற்றின்  வழியாகக்  கிடைக்கும்  வருமானமே  எரிபொருள் உதவித்  தொகை  கொடுப்பதற்குப்  போதுமானதாகும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கூறினார்.

அந்த  வகையில்  கிடைக்கும்  வருமானம்  ரிம17.3 பில்லியன். அதே  வேளையில்  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  உதவித்  தொகையாகக்  கொடுக்கப்படுவது  ரிம13.7 பில்லியன்.

“இதிலிருந்து எரிபொருள்  விலையைக்  குறைவாக  வைத்துக்கொள்ள  .பிஎன் பெரிய  மனத்துடன்  ஏதோ அவர்களின்  சொந்தப்  பணத்தைச்  செலவிடுவதுபோல் அலட்டிக்கொள்வது  வெறும்  கட்டுக்கதை  என்பதைப்  புரிந்து  கொள்ளலாம்.

“காருக்கான  பல்வேறு வரிகளே உதவித் தொகை  கொடுப்பதற்குப்  போதுமானவை”.

நேற்றிரவு  நடைபெற்ற  பக்கத்தான்  ரக்யாட்  பட்ஜெட் மீதான  கருத்தரங்கில்  பேசியபோது  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.