தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனின் சகோதரருக்கு ரிம77 மில்லியன் குத்தகை கொடுக்கப்பட்டது பற்றி டிஏபி எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
மது போத்தல்களுக்கு பாதுகாப்பு முத்திரைகள் இடும் குத்தகையை அரச மலேசிய சுங்கத் துறை ஹரிஸ் ஒன் உசேனுக்கு(வலம்) கொடுத்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி கூறினார்.
“அந்தக் குத்தகை நேரடிப் பேரத்தின்வழி அமைச்சர் ஒருவரின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டது எப்படி என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் புவா கூறினார்.
ஏனென்றால் மற்றவர்களுக்கு தகுதி இல்லைபோல் தெரிகிறது ??
மது போத்தல்கள் என்பதால் அவருக்குக் கொடுக்கப் பட்டிருக்கலாம்!
இது ஒன்றும் புதிதல்லவே!!! பல்லாண்டு காலமாக நடப்பில் உள்ளதுதானே!!!
57 ஆண்டுகளாக சுரண்டி வாழ்ந்த வாழ்க்கை மாறுமா? 57 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் இந்நாட்டு பணம் இவன்களின் பையீலும் இவன்களின் ஜால்ராக்களின் வங்கி கணக்கிலும் இருக்கின்றது? பணம் பதவி எல்லாம் இவன்களும் இவன்களின் சொந்தங்களும் அனுபவிக்கவே எல்லாம் இந்நாட்டில். அன்று MIC -MCA நம்முடைய உரிமைகளை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந் நிலை ஏற்பட்டு இருக்காது. இவன்களின் சுகத்திற்க்காக நம்மை எல்லாம் விற்று விற்றுவிட்டான்கள்
நீங்கள் ஒரு முறை மட்டும் இது போன்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு அதோடு மறந்து விடாமல் பதில் வரும்வரை மற்ற தலைவர்களும்
முடிந்த இடங்களில் எல்லாம் கேட்கவேண்டும். மலேசிய மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். அரசு தலைவர்களுக்கு காது செவிடு அதிகம். ஆக , நீங்கள் கத்துவது தொடர்ச்சியாக, சத்தமாக இருக்க வேண்டும்,
மது haram என்று சுற்றி திரியும் மலாய்க்காரர்கள் மத்தியில் இவனுக்கு மட்டும் இந்த குத்தகை கொடுப்பது ஏன்?
தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனின் சகோதரர் என்றால் பிரதமர் நஜிபுக்கு உறவினராச்சே ! அப்படியானால் ரோஸ்மாவும் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்திருப்பார். அதனால்தான் இந்த குத்தகை கொடுக்க பட்டிருக்கும். ஆகவே, இதற்க்கு மேலும் இந்த குத்தகையை பற்றி பேசுவோருக்கு எதிராக “தேச நிந்தனை” சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அம்னோ உறுப்பினர்கள் போலீசில் புகார் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.
நாடு திவால் வரைக்கும் இவன்கள் எப்படி அப்படி தன் >>>
ஸ்ஃஃ அதெல்லாம் கேட்க கூடாது.
மது அவர்களுக்கு haram இல்லையா ?
லஞ்சம் அல்லது கையூட்டு, மதுவால் வரும் வரி,சூதாட்டத்தால் வரும் வரி,இன பாகுபாட்டால் கிடைக்கும் லாபம்,அரசியல் கொள்ளை போன்றவற்றால் நன்மை கிடைக்குமானால் அவை அனைத்தும் ஹாலாலாக மாறிவிடும்.இதுதான் கடந்த 57 ஆண்டு கால அம்னோ அரசியல்
மது ஹராம் . ஆனால் அதன் வழி வரும் லாபம் ஹாலால் .எல்லாம் நாடகம் .இது ஒன்றும் பெரிய காசு இல்லையே . வீட்டில் படுத்துக்கொண்டே இவன் கோடீஸ்வரன் .
தம்பிக்கு இந்த உதவி கூட செய்யவில்லை என்றால் அண்ணன்
மந்திரியாக இருப்பதில் அர்த்தம் இல்லை.
பேசுவதற்குதான் ஹரஹம் செயல் படுவதில் ஒரு மண்ணும் இல்லை நான்கு இலக்கு நம்பர் கடைகளில் இவர்களை பாருங்கள் அது ஹராம்இல்லை இவர்களை சொல்லி க்ற்றம்மில்லை தொடர்ந்து இவர்கள் ஆள்வதற்கு வழி செய்து கொடுக்கும் மாங்கமடையர்களை சொல்ல வேண்டும் !!!
இன்னும் சில காலத்தில் மது, சூதாட்டம் விலை மாதர்கள் மையங்களை நடத்துவதற்கு மலாய்க்காரர்களுக்கு உரிமம் / லைசன்ஸ் கொடுக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.காரணம் பணம்,பணம்,பணம், பூமிபுத்ரா போலே!
தமிழ் பித்தன், சரியாகச் சொன்னீர்கள். ஈட்டி எட்டிய வரையும்தான் பாயும். பணமோ, பாதாளம் வரை என்ன ஹராமை மீறி பிணக் குழியிலும் பாயும்…!!!!