தேச நிந்தனை கருத்துகளைச் சொன்னதாக பேராக் டிஏபி புகார் செய்திருப்பதை அடுத்து, போலீசார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தெரிவித்த இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மேல்விவரங்கள் தெரிவிக்க மறுத்தார்.
“விசாரணை தொடர்கிறது. அவரிடம் (ஜாஹிட்) வாக்குமூலம் பெற்றிருக்கிறோம்”, என்றவர் புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் ஒரு செராமாவில் பேசியபோது அமைச்சர் தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்தார் என பேராக் டிஏபி புகார் செய்துள்ளது.
இப்படியும் ஒரு நாடக அரேங்கேற்றம். அவரின் வாக்குமூலம் திருப்தியாக இல்லை என்றால் அவரை 2 நாள் லாக்கப்பில் வைக்கப்போகிறார்கள்..!!
விவரத்தை சொல்ல மறுத்ததை அப்படியே மறந்தும் விடுங்கள் என்று அறிக்கை விட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.!!
வெறும் கண்துடைப்பு.- என்றுதான் நீதி நியாயம் இந்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மையாக நடந்திருக்கிறது. 60 களில் SP சீனிவாசகம் அந்நாள் அமைச்சரை ஊழலுக்காக பதவியிலிருந்து இறங்க வைத்தார் –இப்போது நடக்குமா?
அரசியல் நாடகம்…எங்கே இவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து குற்றவாளி என கூண்டில்தான் ஏற்றி பாருங்களேன்! சும்மா மக்களை முட்டாளாக்க நாடகம் நடத்துராணுங்க!
பூச்சாண்டி பூச்சாண்டி மக்களுக்கு பூச்சாண்டி…
இதுவும் ஒரு கண் துடைப்பு.
Latest WAYANG KULIT !!!!
நாலு பேருக்குத் தெரிகிறாப் போல தொலைகாட்சியில் விசாரணை நடத்துங்கள். நாங்கள் நம்புகிறோம்!