பெட்ரோலுக்குக் கூடுதல் விலை கொடுக்கிறோம், அதனால் கார் விலை குறைய வேண்டும்

turun hargaஅரசாங்கம்  இனியும் கார்களுக்கு வரம்புமீறி வரிகள்  விதிப்பதை  பெட்ரோல்  உதவித்  தொகையைக்  காண்பித்து  நியாயப்படுத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்று  கூறும் பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி,  கடந்த  ஓர்  ஆண்டில்  புத்ரா  ஜெயா  பெட்ரோல்  விலையில்  40 சென் உயர்த்தியிருப்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“இதுவரை  கூட்டரசு  அரசாங்கம்  பெட்ரோலுக்கும் டீசலுக்கும் உதவித் தொகை நிறைய கொடுப்பதால் வாகனங்களுக்குக்  கூடுதல்  வரி விதிப்பது  அவசியகிறது  என்று  சொல்லி  வந்தது.

“இப்போது  ஓராண்டில்  இரண்டு தடவை(2013 செப்டம்பரில் 20 சென், 2014 அக்டோபரில் 20 சென்) பெட்ரோலின்  விலை  உயர்த்தப்பட்டதால்  அரசாங்கத்தின்  உதவித்  தொகை  வெகுவாகக்  குறைந்துள்ளது”, என்றார்.

எனவே, அரசாங்கம் வாகனங்களுக்கான  தீர்வைகளைப் படிப்படியாகக்  குறைக்க  வேண்டும்  என  ரபிஸி வலியுறுத்தினார்.