பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி தொடர்ந்து கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார். மலாய்மொழி பைபிள்களைக் கொளுத்தப்போவதாகக் கூறப்பட்டதை மிரட்டல் அல்ல என்று அவர் தட்டிக்கழித்தது “வெறுப்பூட்டுவதாக” அனைத்து சமய மன்றம் ஒன்று சாடியுள்ளது.
இப்படிப்பட்ட மிரட்டல்களை ஒதுக்கித்தள்ளுவது அவை போன்ற மிரட்டல்கள் மீண்டும் விடுக்கப்படுவதற்கு “அனுமதி கொடுப்பது” போன்றதாகும் என மலேசிய பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களின் ஆலோசனை மன்றம் கூறியது.
“பைபிள்களை எரிக்கத் தூண்டுவது அரசமைப்புக்கும் சட்ட ஆளுமைக்கும் எதிரான ஒரு குற்றச்செயலாகும்.
“அதை அனுமதித்தால் பிறகு நமக்கும் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு குற்றச்செயல்களிலும் தலையைத் துண்டிக்கும் செயலையும் ஈடுபட்டுவரும் ஈராக் மற்றும் லெவண்ட் இஸ்லாமிய அரசுக்கும்(ஐஎஸ்ஐஎல்) வேறுபாடு இருக்காது”, என அம்மன்றம் கடுமையாகக் கண்டிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இன்றே பெர்காசா அலி இப்ராகிம், நான்சி ஷூக்ரியை ஆதரித்து அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம்!
பைபிளை கொழுத போவதாக கூரிய வாசகத்தை மிரட்டல் அல்ல என்று கூரிய இந்த அமைச்சரை(நன்சி) பிரதமர் அவர்கள் பதவி இறக்கம் செய்ய வேண்டும் இது உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்கள் குரல்…செய்விர்களா பிரதமர் அவர்களே.