கிளந்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்ளத் தவறினால் சிறை

fridayகிளந்தானில், மூன்று வாரங்கள்  தொடர்ச்சியாக  வெள்ளிக்கிழமை  தொழுகையில்  கலந்துகொள்ளாத  முஸ்லிம்  ஆடவர்கள்  ஓராண்டுச்  சிறைத்தண்டனை  பெறுவர்.

முதிர்ச்சி  அடைந்த  ஆடவர்கள்  தகுந்த காரணமின்றி  வெள்ளிக்கிழமை  தொழுகையில்  கலந்துகொள்வதைத்  தவிர்ப்பது  தெரிய  வந்தால்  அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என கிளந்தான், இஸ்லாமிய  மேம்பாடு, சமய  பரப்புரை, தகவல்  மற்றும்  வட்டார  தொடர்புக்குழுத்  தலைவர்  முகம்மட்  நஸருடின்  டாவுட்  கூறினார்.

“வெள்ளிக்கிழமை  மேன்மையான  நாள். வாரத்துக்கொரு முறை  நடைபெறும்  வெள்ளிக்கிழமை  தொழுகையைத்  தவிர்ப்பதற்குக் காரணம்  எதுவும்  இருக்க  முடியாது”, என்றவர்  கிளந்தான்  சட்டமன்றத்தில்  கூறினார்.