தேச நிந்தனைச் சட்டத்தைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஊர்வலம்

walkசுமார்  600 பேர்- பெரும்பாலும்  வழக்குரைஞர்கள்-   தேச  நிந்தனைச்  சட்டத்துக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  இன்று  காலை  பாடாங்  மெர்போக்-கிலிருந்து  நாடாளுமன்றம்வரை  ஊர்வலம்  சென்றனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில்  பல  முக்கிய  பெருமக்களும்- வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்,  பெர்சே  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன், மலேசிய  சோசலிசக்  கட்சித்  தலைமைச்  செயலாளர் எஸ். அருள்செல்வம், எதிரணி  எம்பிகள்  தியோ  நை  சிங்,  இங்கா  கோர்  மிங்,  கோபிந்த்  சிங் டியோ  போன்றோரும்-   இடம்பெற்றிருந்தனர்.

வழக்குரைஞர்  மன்றத்தின்  பத்து  பிரதிநிதிகள், லியோங்  தலைமையில்  நாடாளுமன்றத்துக்குள்  சென்று  மகஜர்  ஒன்றைக்  கொடுப்பார்கள். அதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சார்பாக  பிரதமர்துறை  அமைச்சர்  மா  சியு  கியோங்  பெற்றுக்கொள்வார்.