ஊழலை எதிர்ப்பதற்கு அதிகாரத்துவ இரகசிய சட்ட(ஒஎஸ்ஏ)த்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா. அச்சட்டம் “ஆயிரக்கனக்கான பாவங்களை மூடிமறைக்கிறது” என்பது அவரது கருத்து.
நிதி அமைச்சரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1957 நிதியியல் நடைமுறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்த அம்னோ மூத்த தலைவர் கூறினார்.
“எல்லாமே இரகசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை. அரசாங்கம்மீது எனக்கு ஆத்திரம் இல்லை. இது நம் கட்டமைபில் உள்ள பலவீனம்.
“இச்சட்டம் (நிதியியல் நடைமுறைச் சட்டம்) பற்றியும் எனக்குத் தெரியும். நான் நிதி அமைச்சில் இருந்தபோது அதைப் பயன்படுத்தி இருக்கிறேன்”, என தெங்கு ரசாலி இன்று ஒரு கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார்.
அதற்குத்தானே தொழுகை செய்கிறோம்! அப்படி இருந்தும் ………!
அக்காலம் முதல் இக்காலம் வரை இதுதானே நடந்துக் கொண்டிருக்கிறது இந்த அம்னோ ஆட்சியில். எண்ணிலடங்கா பாவங்கள்.
சொல்லவேண்டியதை, சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொல்லிவிட்டார் !! செய்வார்களா ?? அதைதான் நாம் கேட்கவேண்டிய ,எதிர்பார்கின்ற ஒன்று!
சொல்லி சொல்லி எனக்கும் சலித்து விட்டது.