பினாங்கு அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) போலீசின் பணிகளை எடுத்துக்கொள்ள முன்றது எனவும் அம்மாநிலத்தில் குற்ற விகிதம் குறைந்தததற்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.
பிபிஎஸ் உறுப்பினர்கள் வாகனங்களைப் சோதனையிடும் வேலையை மேற்கொண்டதாக தமக்குப் புகார்கள் கிடைத்துள்ளன என்றாரவர். அது போலீசின் வேலை என்றவர் சொன்னார்.
“அது, போலீசுக்கு உதவி செய்வதாகக் கூறப்படும் ஓரு அமைப்பு செய்யும் வேலை அல்ல. மாறாக, போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சி”, என அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
போலீஸ் அவர்தம் வேலையை ஒழுங்காக கவனித்திருந்தால் ஏன் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியும் ‘gated community’ யாக மாறி வருகின்றது?.
அதற்கு மேலும் பணத்தை செலவழித்து மக்கள் சுமையை ஏற்றுக் கொள்வது எதனால்?. போலிசை நம்பி மக்கள் இன்னும் நாசமாக போக வேண்டுமா?. அதனால, மக்கள் தன்னார்வ காவல் படை வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைப்போம். செம்பருத்தி அதற்கான கையெழுத்து வேட்டை நடவடிக்கையை ஆரம்பிக்கட்டும்.
கடமையை சரியாக, செய்வன செய்வது வேறு ! கடமைக்காக செய்வது வேறு !
இதில் எதை செய்யபோகிறது நமது காவல்துறை ??
நல்ல செயலை யார் செய்தால் என்ன ! வர வேற்போம் .
நீங்களும் செய்யமாட்டிங்க,செய்யரவனையும் விடமாட்டிங்க.
பினாங்கில் எதாவது பிரச்சனை என்றால் 10 நிமிடத்தில் பி.பி .எஸ்
வந்து விடுகிறார்களாம்,பினாங்கு மக்கள் சொல்கிறார்கள்.
சட்டங்கள் மேல் மாடியில் அமர்ந்து சிந்தித்து இயற்றப்படவேண்டும்,அதைவிடுத்து மனதில் வைத்து அல்லது உணர்ச்சி வயபட்டு ஏற்படுத்தகூடாது,இயற்றப்படகூடாது.பின் விழைவுகள் மிக மோசமான அமையும்.தகுதியான பயிற்சி அவசியம்,அல்லது பினாங்கு சிங்கையை போல் தனியே பிரிந்து செல்ல திட்டம் ஏதும்.வாழ்க நாராயண நாமம்.
அடபாவிகளா..”பினாங்கு சிங்கையை போல் தனியே பிரிந்து செல்ல திட்டம் ஏதும்” இதற்குத்தானே பாக்காதானுடன் சிங் சக் போடுகிறான் DAP .
தன்னாலும் நல்லது செய்ய இயலாது. அதை செய்பவரையும் செய்ய விடவே மாட்டாதவர். PPS தொடர்ந்து இயங்கினால் அதனால் மக்களிடையே காவல்துறையின் பலவீனங்கள் பளிச்சென தெரிந்துவிடும். ஆகவே அது இயங்கக்கூடாது – மக்களுக்கு அதனால் நன்மை என்றாலும். இதுவே எங்கள் நல்ல கொள்கை.