கேஎல் பட்ஜெட் அதிகாரத்துவ இரகசியமா?

kl budgetகோலாலும்பூர்  மாநகராட்சி (டிபிகேஎல்) பட்ஜெட்  அதிகாரத்துவ  இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ்  வருகிறதாம்.

இன்று  கேஎல்  மேயரின் விளக்கக்  கூட்டத்தில்  கலந்துகொண்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  இவ்வாறு  டிவிட்  செய்துள்ளார்.

“இன்று  மேயரைச்  சந்தித்து  பட்ஜெட்  பற்றி  விளக்கம்  அளிக்கப்பட்டதைக் கேட்டு  உற்சாக  இருந்தேன். பிறகுதான்  தெரிந்தது. அது  ஓஎஸ்ஏ-இன்கீழ்  வருகிறதாம்”, என்றவர்  டிவிட்டரில்  கூறினார்.

அக்கூட்டம்  இரகசியமாக  நடைபெற்றது.  ஊடகங்கள்  அனுமதிக்கப்படவில்லை.