பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி நாடாளுமன்றத்தில் அளித்த பதில் தொடர்பில் அதன் நிலைப்பாடு என்னவென்பதை அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை…..காரணம்இஸ்லாத்தின் புனிதத்தைக் காக்கும் நோக்கில்தான் மலாய்மொழி பைபிள்களைக் கொளுத்தப்போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்”, என நன்சி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
அவரது விளக்கத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து “தாம் இப்ராகிம் அலியையோ அவரின் சமய நம்பிக்கைகளையோ ஆதரிக்கவில்லை” என்றும் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) முடிவைத்தான் “எடுத்துரைத்ததாகவும்” நன்சி விளக்கமளித்தார்.
ஏஜியும் போலீசுக்கும் எடுக்கும் முடிவுகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு என்பதை லிம் சுட்டிக்காட்டினார்.
அப்படியானால், இப்ராகிமுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என்ற ஏஜி-இன் முடிவை அமைச்சரவை ஒப்புக்கொள்கிறதா, மறுக்கிறதா? இதற்குப் பதில் தெரிய வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
மலேசியாவில் இஸ்லாத்தின் புனிதத்தை சீரழிப்பதற்கு அம்னோ முக்கிய பங்கு வகிக்கிறது ; அம்னோவின் பங்காளிகள் அதற்கு துணையாக இருக்கிறது ; என்பதற்கு இந்த பிரதமர்துறை அமைச்சரும் சட்டத்துறைத் தலைவரும் ஒரு உதாரணம்.