அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினும் மாணவப் போராட்டவாதி ஆடம் அட்லி அப்துல் ஹமிட்டும் இளைஞர் அரசியலை விவாதிக்கும் கூட்டமொன்றில் கலந்துகொண்டனர்
ஆனால், கைரி பேசிக்க்கொண்டிருந்தபோதே ஆடம் கிளம்பிச் சென்று விட்டார். அதை அறிந்து கைரி எமாற்றம் தெரிவித்தார். ஆடம் இருந்திருந்தால் அவரிடம் அம்னோ உறுப்பினர் பாரம் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே, கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்.
இதை ஆடமிடம் தெரிவித்து அவரின் கருத்தை வினவியது மலேசியாகினி. “நன்றி, அம்னோ பாரத்தை கைரியே வைத்துக்கொள்ளட்டும்.
“என்னிடம் தேச நிந்தனை வழக்கு உள்பட பல பாரங்கள் இருக்கின்றன”, என்று ஆடம் குத்தலாகக் குறிப்பிட்டார்.
தம்பி ஆடம் அட்லி.! பிழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இந்நாட்டில் நேர்மையாக வாழ நினைப்பது, கடற்கரையில் மணல் வீடுகளை கட்டுவதற்கு ஒப்பாகும். ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பீர்களேயானால், உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போம். அன்வாரை C4 வைத்து வெடித்தாலும் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்போம். இந்நாட்டில் இதுதான் ஜனநாயகம் என்று தெரிந்தும் இன்னும் வாலாட்டினால், நஜிப் வீட்டு பூனைக்கு முத்தம் கொடுத்துவிட்டீர்கள் என வழக்குப் போடுவோம். அதன் பின்பு நீங்கள் பாவித்த தலையணை, கைக்குட்டை, பூனையில் ஒட்டிக் கொண்டிருக்கும் லிப்ஸ்டிக் யாவும் நீதிமன்ற படிகள் ஏற வேண்டியிருக்கும். ஜாக்கிரதை! எப்படி வசதி?
ஏதோ இப்போது வயசு கோளாறு! நேரம் வரும் போது நீங்களும் அவர்கள் பக்கம் தான் போவீர்கள்!
இப்படிப்பட்ட துணிச்சல் மிக்க இளைஞர்களே நமது நாட்டிற்கு தேவை, வாழ்த்துக்கள்.
வளர்ந்து வரும் நல்ல இளைஞரை இவர்களே கெடுத்து விடுவார்கள்.
இவர் போன்ற தைரியமிக்க, கொள்கைவாதிகளுக்கு PR வரும் தேர்தலில் நல்ல வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். 6, 7-தவணை சில வயது முதிர்ந்ததுகளே இன்னும் விடாப்பிடியாக தங்கள் சீட்டை படித்துக்கொண்டு இருக்கக்கூடாது. போராடுவதற்கு இளையர் தேவை; ஆனால் தேர்தல் சீட்டிற்கு ரொம்ப நாள் wait பண்ண வேண்டும் எனும் நிலை இருக்கக்கூடாது.