போர்ட் டிக்சன் கடல்கரையில் மேல்சட்டையின்றி சூரிய குளியல் போட்ட நான்கு பெண்களை நெகிரி செம்பிலான் போலீசார் தேடுகின்றனர்.
அது பற்றி போர்ட் டிக்சன் முனிசிபல் மன்றம் புகார் செய்திருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியதாக சின்சியு டெய்லி கூறியது.
த ஸ்டாரும் அச்செய்தியை அறிவித்திருந்தது. 20-வயதுடைய பெண்கள் மூவரும் 40-வயது பெண் ஒருவரும் பிகினி மட்டும் அணிந்திருந்ததைக் கண்டதாக பலர் அதனிடம் தெரிவித்துள்ளனர்..
போர்ட் டிக்சன், பந்தாய் சவுஜானாவில் பிற்பகல் 3 மணி அளவில் இது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், என்று நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.
மேல்சட்டையின்றி சூரிய குளியல் போட்ட பெண்களை வாயில் எச்சில் ஒழுகும்வரை பார்த்து விட்டு, இப்போது போலிஸ் தேடுகிறதா ???
அட நாதாரிகளா !!!
மீண்டும் ஒத்திகை பார்க்கவேண்டுமாம்…..
கடற்கரையில் பெண்கள் பிகினி அணிவது ஓர் அபூர்வமா?! ஒண்ணுமே விளங்க மாட்டேனுதே இந்த நாட்டிலே நடக்கிறது? இனி ஒருகால் நாம் நமது குளியல் அறையில் குளிக்கும் போதும் உடை அணிந்தே குளிக்க வேண்டும் என்ற நல்நடத்தை அமலாக்கம் வருமோ..?! நாட்டில் 1001 பெரும் பிரச்சனைகள், இதுபோன்ற விசயங்களில் மட்டும், energy டானிக் சாப்பிட்டுவிட்டு, லென்சைப் பிடித்துக்கொண்டு தன்னார்வ துடிப்புடன் துருவி2 அலசுகின்றனர்….!! மக்கள் முறையிடும் எல்லா குற்ற செயல்களையும் இதுபோல் விறு2ப்பாக அலசினால் குடிமக்களுக்கு எவ்வளவு நல்லது?
ஆமாம்.., இவர்கள் கடற்கரையில் குளிக்கும் போது இவர்களின் ஆடையற்ற முதுகுப்புறத்தில் இவர்கள் ஒவ்வொருவரின் வயதையும் பெரிய எண்ணில் எழுதி ஒட்டி இருந்தனரா?! ஆளு யாருன்னு இன்னும் தெரியலே, ஆனா வயச மட்டும் துல்லியமா சொல்லுரீங்க !!!!!!!!!!!!!! அபாரத் திறமைங்க உங்கத் திறமை. மறுக்க முடுயாத உண்மை இது.
.அதனை கலைக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்க வேண்ட… பார்த்தால் இப்படித்தான் தேவையில்லாத பிரச்சனைகள் எழும்.