‘அன்வாருக்காக மீண்டும் தெருவில் இறங்கிப் போராடப்போவதில்லை’

lensaபக்கத்தான்  ரக்யாட்டுக்கு  ஆதரவானது  என்று கருதப்படும்  ஒரு  என்ஜிஓ,  அன்வாரை  ஓய்வுபெறச்  சொல்கிறது. அவருக்காகப்  போராடிப்  போராடி  மக்கள்  “அலுத்துப்  போனார்களாம்”.

இது  ரிபோர்மாசி  இயக்கத்தைத்   தோற்றுவித்த  1998-1999  காலக்  கட்டம்  அல்ல  என்பதை  லென்சா  அனாக்  மூடா  மலேசியா(லென்சா) அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்  எஹ்சான்  புகாரி  ஒர்  அறிக்கையில்  கூறினார்.

கூட்டரசு  நீதிமன்றம்  அவருடைய  மேல்முறையீட்டை  ஏற்றுக்கொண்டாலும்  எதிர்காலத்தில்  அதேபோல் வேறு  பல  வழக்குகள்  தொடுக்கப்படலாம் என்றாரவர்.

அன்வாருக்காக  அது  மறுபடியும் தெரு  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடத்  தயாராக  இல்லை  என எஹ்சான்  கூறினார்.

“ரீபோர்மாசி  என்ற  முழக்கத்தோடு  மீண்டும் தெருக்களை  நிரப்புவோம்  என  நினைக்கிறீர்களா?

“மாட்டோம். இது  1998  அல்லது  1999  அல்ல. எதற்குப்  போராடுவது  என்பதை  இனி  நாங்கள்தான்  முடிவு  செய்வோம்”,  என்றாரவர்.

அன்வாரின்  இறுதி  முறையீடு  அக்டோபர்  28, 29  ஆகிய  நாள்களில்  விசாரணைக்கு  வருகிறது.

விசாரணைக்கு  முன்னதாக  அன்வாருக்கு  ஆதரவாக  மக்கள்  இயக்கம்  ஒன்றை  ஏற்பாடு  செய்ய  பிகேஆர்   இளைஞர்  பகுதி  முனைந்துள்ள  வேளையில்  லென்சா-வின்  இந்த  அறிக்கை  வெளிவந்துள்ளது.