டிஎபி: பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்

 

எரிபொருளுக்கான உலகச் சந்தையின் விலையைப் பார்க்கும் போது மலேசியாவில் ரோன்95க்கு அரசாங்கம் மானியம் ஏதும் அளிக்கவில்லைPetrol dap என்பதோடு மலேசியர்கள் சந்தை விலையை விட கூடுதலான விலை கொடுக்கின்றனர் என்று டிஎபி பேராக் கூறுகிறது.

நேற்றைய விலையின்படி, உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை யுஎஸ்$84.47 (ரிம277) என்று டிஎபியின் பொருளாதாரப் பிரிவின் தலைவர் சோங் ஸெமின் கூறுகிறார்.

உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை யுஎஸ்$84.80 (ரிம278) ஆக இருக்கையில் அரசாங்கத்தின் மான்யம் ஏதும் இன்றி ஒரு லீட்டர் ரோன்95தின் விலை ரிம2.30 ஆக இருக்க வேண்டும் என்று AmResearch ஆய்வை மேற்கோள் காட்டி அவர் கூறுகிறார்.

Petrol dap1தற்போது, ஒரு பீப்பாயின் விலை யுஸ்$0.53 (ரிம1.74) குறைவாக இருக்கிறது. அதனால் மலேசியர்கள் இப்போது உண்மையிலேயே எரிபொருள் வரி கட்டுகின்றனர் என்றாரவர்.

AmResearch மதிப்பீடு செய்துள்ளபடி உலகளவில் எரிப்பொருளின் விலைகள் 10 விழுக்காடு சரிவு காணும். அப்போது அரசாங்கத்தில் மான்ய ஒதுக்கீடு ரிம35.6 பில்லியன்  குறையும் என்று சோங் மேலும் கூறினார்.

பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும்

இந்நிலையில், ரோன்95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அரசாங்கம் உடனடியாக குறைக்க வேண்டும் என்று சோங் அரசாங்கத்தை வற்புறுத்தினார்.

நடப்போமா!