கூடுதல் ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று எச்சரிக்கும் கெராக்கான் மகளிர் பகுதி, மலேசியாவின் “அரசியல் நிலைப்பாட்டுக்கு” தடுப்புச் சட்டங்கள் தேவை என்றும் வலியுறுத்துகிறது.
“கெராக்கான் மகளிர் பகுதி தடுப்புச் சட்டங்களை முழுமையாக ஆதரிக்கிறது. அவை, அரசியல் நிலைத்தன்மையைக் காக்கவும் கூட்டரசு அரசமைப்பு, ருக்குன் நெகாரா ஆகியவற்றை நிலைநிறுத்தவும் அவசியம்”, என்று அதன் தலைவர் டான் லியான் ஹோ கட்சி மாநாட்டில் இன்று கூறினார்.
“ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை. அது இறுதியில் நம்மையே அழித்துவிடும்”, என்றாரவர்.
கூடுதல் ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் // முன்னாள் பிரதமர் படாவி போல் கருத்து சொல்கிறார் ! யாருக்காவது விளங்கியதா ? இது ஜனநாயக நாடுதானே !