தங்களுக்கு எதிரான மிரட்டல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற அன்வார் வழக்குரைஞர்களின் கோரிக்கை குறித்து அரசாங்கமும் சட்டத்துறைத் தலைவரும் (ஏஜி) மவுனமாக இருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் ஆர்.சிவராசா கூறினார்.
அன்வாரின் வழக்குரைஞரும் பாடாங் செராய் எம்பி-யுமான என். சுரேந்திரக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதன் தொடர்பில்தான் அவர் இவ்வாறு கூறினார்.
“அவர்கள் மவுனமாக இருப்பதும் நடவடிக்கை எடுக்காமலிருப்பதும் அன்வாருக்கு அவரின் இறுதி முறையீட்டு வழக்கில் நியாயமான விசாரணை மறுக்கப்படுகிறது என்ற கருத்தைத்தான் வலுப்படுத்துகிறது.
“வழக்குரைஞர் குழுத் தலைவரின் தலைக்குயரே தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தொங்கிக் கொண்டிருந்தால் அக்குழு வாதங்களைத் திட்டமிடுவது எப்படி, வாதாடுவது எப்படி?”, என சிவராசா வினவினார்.
ஆமாம் ..அவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாதவர்கள் …அதனால் பயத்தில் நடுங்குகின்றனர் … ஏன் ஐயா இப்படி…நீங்கள் அன்வரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ..இப்படியெல்லமா செய்தி விடுவது ..