போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டக் குத்தகை சாபா குத்தகையாளர்களுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக சாபா முதலமைச்சர் முசா அமான் நேற்றுத் தெரிவித்தார்.
“அது பற்றிப் பிரதமருடன் பேசினேன். அவரும் அதை மறு ஆய்வு செய்ய இணங்கியுள்ளார்.
“அத்திட்டத்தால் உள்ளூர் குத்தகையாளர்கள் நன்மை பெற வேண்டும் என்று அக்கறை காட்டியவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது”, என்றவர் கூறினார்.
அத்திட்டத்துக்கான குத்தகை மாநிலத்துக்கு வெளியில் உள்ள பணக்கார நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கலாபாகான் எம்பி அப்துல் கப்பூர் சாலே. அத்திட்டத்தால் சாபா நிறுவனங்கள்தான் பயனடைய வேண்டும் என்றவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
மறு ஆய்வு செய்து எங்க ம.இ.க. – காரங்ககிட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் ஒரு பகுதியை ஒப்படையுங்கள். எங்களுக்கு எலும்புத் துண்டாவது கிடைக்கும்.