சிலாங்கூர் நீர் சீரமைப்பு ஒப்பந்தம் எதற்காக இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்கு புத்ரா ஜெயா-விடமிருந்து விளக்கம் தேவை என சிலாங்கூர் மந்திரி புசார் கேட்கிறார்.
இன்று செய்தியாளர்களிடையே பேசிய எம்பி, முகம்மட் அஸ்மின் அலி, அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்ததாகவும் அதை தேசிய இரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.
“அதில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை.
“அது இரு தரப்பினர் செய்துகொண்ட ஒரு வணிக ஒப்பந்தம். அதை ஏன் கமுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்?
“பொதுமக்களின் நலன் காப்பதுதான் அதன் நோக்கம் என்கிறபோது, அதைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதற்குக் காரணம் இல்லையே”, என்றவர் கூறினார்.
சட்டத்துறைத் தலைவரின்(ஏஜி) ஆலோசனையின்பேரில்தான் அந்த ஒப்பந்தத்தைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக எரிபொருள் அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கில்லி கூறியிருப்பதை மந்திரி புசார் சுட்டிக்காட்டினார்.
“அவர் (ஏஜி) என்ன சொன்னார்? ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும், அது எனக்குத் தெரிய வேண்டும்”, என்று அஸ்மின் கூறினார்.
இப்படிதான் அறிவு பூர்வமாக, தைரியமாகப் பேச வேண்டும். பதவி மக்களுக்கு சேவை செய்வதற்கே. அதன் மூலம் நம்மை வளப்படுத்திக் கொள்வதற்கு அல்ல. இந்தப் பதவி போனாலும் போகட்டும் என எண்ணி மக்கள் நலன்காக்க துணிவுடன் பேசுங்கள். சிந்திக்கக் கூடிய மக்களின் ஆதரவு இன்னும் கூடும். திருட்டுக் கூட்டத்தின் திமிர் அடங்கும். நல்ல முதல் அடி;
முகமட் அஸ்மின் அலியைப் பாராட்டுகிறேன். ஆனால், ஹாங்காட் ஹாங்காட் தை ஆயாம் கதையாகிவிடக் கூடாது என விரும்புகிறேன்.
நம் நாட்டில் உம்னோ கரன் கொள்ளை அடிக்கும் விசயங்களை வெளியில் சொன்னால் அது தேசிய பாதுகாப்பு என்று கதை சொல்லுவனுங்கே நாசமா போகே பொது நாடு
ரகசியமாக இருந்தால்தான் கொள்ளை அடிக்க முடியும்