நேற்று கெராக்கான் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன் இன்று அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தமது உரையில் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களைக் கண்டித்ததுடன் மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார்.
டான் லாய் சூன் அவரது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அக்கட்சி அவருக்கு காரணம் கோரும் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது. பதில் அளிக்க அவருக்கு 14 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கத் தவறினால் டான் லாய் சூன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
டான் லாய் சூன் கூறிய கருத்தால் சஞ்சலமடைந்துள்ள அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம் என்று கட்சியின் துனைத் தலைவர் சியா சூன் ஹை கூறினார்.
பெம்பெலா என்ற 52 மலாய்-முஸ்லிம் கூட்டணி டான் லாய் சூன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
உம்னோ காரன் பல தடவை என்னனமோ சொல்லிருக்கான்/ சொல்லிகிட்டுஇருகன் அப்போ அது ஒரு தப்பு இல்ல ஆனால் மட்டவங்கே சொன்ன ரொம்ப தப்ப? இந்த கேரகன் வுடனடிய நடவடிக்கை எடுத்த மாதிரி உம்னோ அவங்கே ஆலு மேலே பாயும இல்லே மூத்திரம் பேயும………………
பயதுளே வுடனடி நடவடிக்கை அப்போ தன நாகலி கிடைக்கும் அடுத்த 14-வது பொது தேர்டளுலே இப்படி அடிமையை போலே இருக்குறதுக்கு பேசாமே பிரிந்து போலாம் தனி கட்சிய, கௌரவம் கொஞ்சம் மிஞ்சும்.
அடேய் துணிஞ்ச பேசுற ஒருத்தன் இரண்டு பேரையும் வெளியேத்திடுறீங்க, பாக்கியிருப்பது கோகிலன் மாதிரி அளுங்கத்தான்டா? எப்படிடா ஓட்டு போடுறது.
சபாஷ் கெராக்கான்! பெர்காசா, இஸ்மா, போன்ற இயக்கங்களை வைத்துக் கொண்டு, அம்னோ எப்படி இந்நாட்டில் இனத்துவேஷத்தை தூடி விடுகிறதோ, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வப்போது ஆளும் கட்சியிலுள்ள கெராக்கான் இப்படி செய்வது ஓரளவு மகிழ்ச்சியே. ம.இ.கா. விற்கு இந்த அறிவு இன்னும் எட்டவில்லையோ.? ‘தண்ணி’ போட்டு போட்டு மூளை மங்கிவிட்டதோ?
ஏன் இந்த கேராகன் காரனுக்கு உள்ள தயிரியம் நம்ம மா இ கா காரனுக்கும் இண்ட்ரப் காரனுக்கும் இல்ல
நான்தான் அன்றே சொன்னேனே சீனன் மீ சாபுடுரன் mic காரன் xxxx சாபுடுரான் என்று
யாரோ வீசியெறியும் எலும்பு துண்டுகளை சாப்பிட்டு சூடு சொரணையின்றி மழுங்கிப்போனவர்களுக்கு எப்படி தைரியம் வரும்.
உண்மையை சொன்னவருக்கு இதுவா தண்டனை ? அதான்
அம்னோ முன்னால் அமைச்சரே ஒப்பு கொண்டாரே.
மைதீனும்,மகதீரும் தாங்கள் வந்தேறிகள் என்று ஒப்புக்கொண்டபிறகு ,
ஏன் மற்றவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ?